நியூசிலாந்து அபாரம்: 6 விக்கெட்டுகள் இழப்பு; 240 ரன்கள் பின்னிலையில் இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட்டில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய வீரர்கள் குறித்து...

கிறிஸ்ட்சர்ச் திடலில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய அணி டாஸ் வென்று பந்து வீசியது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement
இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினார்கள். அதிகபட்சமாக கே.எல். ராகுல் 25 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி தலா 2 விக்கெட்டுகளும் மாட் ஹென்றி, நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
துருவ் ஜுரெல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 240 ரன்கள் பின்னிலையில் இருக்கிறார்கள். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
முதல் போட்டி சமனில் முடிந்ததால் இந்தக் கடைசி போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா, நியூசிலாந்து முறையே 4,3ஆவது இடங்களில் இருக்கின்றன.