டபிள்யூடிசியில் புதிய வரலாறு படைத்த ரிஷப் பந்த்..! பென் ஸ்டோக்ஸ் சாதனை முறியடிப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய வரலாறு படைத்த ரிஷப் பந்த் குறித்து...

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிக சிஸ்கர்கள் அடித்தவராக புதிய வரலாறு படைத்துள்ளார். முன்னதாக இந்த சாதனை பென் ஸ்டோக்ஸ் வசமிருந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்தது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ரிஷப் பந்த் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்திருந்தார். அந்த சிக்ஸருடன் அவர் புதிய சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் (89) அடித்தவராக ரிஷப் பந்த் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். முன்னதாக பென் ஸ்டோக்ஸ் 88 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாள் சோகமானதாக இருந்தாலும் ரிஷப் பந்த்தின் இந்த சாதனை சற்று ஆறுதலைத் தந்திருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள்
1. ரிஷப் பந்த் - 89 சிக்ஸர்கள்
2. பென் ஸ்டோக்ஸ் - 88 சிக்ஸர்கள்
3. ரோஹித் சர்மா - 56 சிக்ஸர்கள்
4. ஷுப்மன் கில் - 48 சிக்ஸர்கள்
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 45 சிக்ஸர்கள்