இந்தியா மிகவும் அபாயகரமான அணி, ஆனால்... மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கூறுவதென்ன?
இந்தியா மிகவும் அபாயகரமான அணி என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மிகவும் அபாயகரமான அணி என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை (அக்டோபர் 6) டி20 தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியா மிகவும் அபாயகரமான அணி எனவும், இந்திய அணிக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் எனவும் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்பது இந்திய அணிக்குத் தெரியும். இந்திய அணி மிகவும் அபாயகரமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்திய அணிக்கு எதிரான சவாலுக்குத் தயாராக இருக்கிறோம். இரண்டு சிறந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் சிறப்பாக திட்டமிட்டு அதனை சரியாக செயல்படுத்தும் அணி வெற்றி பெறும்.
எங்களது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம். இந்திய அணியில் உள்ள டாப் 3 வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக பவர்பிளேவில் பந்துவீசுவது எளிதான காரியம் கிடையாது. அதிலும் குறிப்பாக, ஒரு சுழற்பந்துவீச்சாளராக பவர்பிளேவில் பந்துவீசுவது மிகவும் சவாலானது. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் என்றால் பந்துவீச்சாளர்களுக்கு அது கூடுதல் சவால். பேட்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்கள் அதிக திட்டங்களுடன் வர வேண்டியிருக்கும் என்றார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (அக்டோபர் 6) லக்னௌவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
West Indies player Akeal Hosein has stated that India is a very dangerous team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.