10 ஆண்டுகள் தலைமைப் பண்பு... ஹர்மன்பிரீத்தை வாழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
இந்திய மகளிரணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் பதிவு குறித்து...
இந்திய மகளிரணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அக்டோபர் 6ல் அறிவித்தார்.
அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய அவர், இந்திய அணியில் கேப்டனாக தனது கடமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இவரது தலைமையில் 2025 ஒருநாள் உலகக் கோப்பை, 2023 மற்றும் 2026ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்திய அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை நியமித்த பிசிசிஐ, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணியையும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்மிருதி மந்தனா கூறியிருப்பதாவது:
உங்களுடன் பல ஆண்டுகளாக விளையாடியது மிகவும் மகிழ்ச்சியானது. 10 ஆண்டுகள் உங்களது தலைமைப் பண்பில் இணைந்து விளையாடியது அற்புதமானது. நாம் இணைந்து இன்னும் பல பதக்கங்களை நமது நாடிற்கு கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.
இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ், “நீங்கள் சாதித்த அனைவற்றும் வாழ்த்துகள். இத்தனை ஆண்டு தலைமைப் பண்புக்கும் அணிக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
ஹர்மன்பிரீத் கௌர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் வீராங்கனையாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஓய்வு குறித்து அவர் எதுவும் சொல்லாததும் குறிப்பிடத்தக்கது.
10 years of your leadership have been fantastic: Smriti Mandhana hails Harmanpreet Kaur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.