இந்திய அணியின் கேப்டனாகும் ஸ்மிருதி மந்தனா?
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் கௌர் விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் கௌர் விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று (அக்டோபர் 6) அறிவித்தார். அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிய அவர், இந்திய அணியில் கேப்டனாக தனது கடமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா, அடுத்தக் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
37 வயதாகும் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
With Harmanpreet Kaur stepping down as captain of the Indian team, reports indicate that Smriti Mandhana is set to be appointed as the new captain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.