இந்திய அணியை வீழ்த்தியது எப்படி? ரகசியம் பகிர்ந்த மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கீமோ பால் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கீமோ பால் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கீமோ பால் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை கீமோ பால் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டர்கள் விளையாடிய முதல் 5 ஓவர்களிலிருந்தே விக்கெட் ரன்கள் குவிப்பதற்கு நன்றாக உள்ளதை அறிந்தோம். பந்துவீச்சாளர்களாக மெதுவான பந்துகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மற்ற ஆடுகளங்களில் எங்களுக்கு இதுபோன்ற சூழல் அமையவில்லை. ஆனால், எங்களது திட்டத்தை இந்த ஆடுகளத்தில் நன்றாக செயல்படுத்த முடிந்தது. அனைத்து பேட்டர்களும் பெரிய ஷாட்டுகள் விளையாட முயற்சிப்பார்கள் என்பதால் அதிகமான யார்க்கர் பந்துகளை வீச முயற்சி செய்தோம். பனிப்பொழிவு இல்லாததால் பந்து வழுக்காமல் இருந்தது, நல்ல கிரிப் கிடைத்தது.
ஒவ்வொரு அணிக்கும் திட்டங்கள் இருக்கும். நாங்கள் எங்களுக்குள் பல்வேறு விஷயங்களை ஆலோசித்தோம். நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. பொதுவாக என்னுடைய திட்டங்களை வெளியே கூற மாட்டேன். ஆனால், என்னுடைய திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்திவிட்டதாக நம்புகிறேன் என்றார்.
West Indies player Keemo Paul has shared the secret behind their victory in the fourth T20 match against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.