தோல்வி எதிரொலி... பாகிஸ்தான் அணியிலிருந்து 7 வீரர்கள், பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் அதிரடியாக நீக்கம்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் திடலில் நடைபெற்ற போட்டிகள் முறையே இன்னிங்ஸ் - 103 ரன்கள் மற்றும் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது.
இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற செப். 3 ஆம் தேதி எட்ஜ்பேஸ்டனில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் டெஸ்ட் பயிற்சியாளர்கள் சர்ஃபாஸ் அகமத், உமர் குல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
நட்சத்திர வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகிய 5 வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதேவேளை, போட்டிகளில் விளையாடாமலேயே ஆமிர் ஜமால் மற்றும் முகமது அவைஸ் ஜாஃபர் உள்ளிட்ட 7 பேரும் நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடர் நடைபெற்றிருக்கும் வேளையில், தொடரில் இருந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டிருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஆல்ரவுண்டர் சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோருடன் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அராஃபத் மின்ஹாஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது இம்ரான் ஜூனியர், விக்கெட் கீப்பர் சையீத் பெய்க் மற்றும் ஆல் ரவுண்டர்களான முகமது இம்ரான், ரஸவுல்லா ஆகியோருக்கு முதல்முறையாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் உதவிப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லே நோஃப்கே ஆகியோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Pakistan have released seven players after their 2-0 Test series defeat to England, making sweeping changes ahead of the final Test. Sarfaraz Ahmed and Umar Gul have also been removed from the coaching staff as the PCB begins a major Test reset.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.