இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. டி20 தொடர் வருகிற செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலுமே ஹாரி ப்ரூக் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார்.
டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், லியம் டாஸன், நியூரின் டொனால்டு, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாக்யுப் மஹ்முத், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோஷ் டங்.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், சோனி பேக்கர், ஜோஸ் பட்லர், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி க்ரோகோம்ப், லியம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜோஷ் டங்.
The England cricket board has announced the squad for the T20 and ODI series against Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.