டாஸன் பந்துவீச்சில் வீழ்ந்தது இலங்கை... பான்டன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்று அசத்தியுள்ள இங்கிலாந்து அணியைப் பற்றி...
இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி கார்டிஃப் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற ஹாரி ப்ரூக் இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷங்கா 37 ரன்களும், லஹிரு உதரா 21 ரன்களுக்கும் எடுக்க கேட்ப சரித் அசலங்கா 31 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாம் டாஸன், கமில் மிஸ்ரா, தசுன் ஷனகா, லஹிரு ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. லியாம் டாஸன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும், ஆதில் ரஷீத், சோனி பேக்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அனியூரின் டொனால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியில் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் அனியூரின் டொனால்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த விக்கெட்டாக 30 ரன்களில் ஜோஸ் பட்லர் வீழ்ந்தார்.
வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹாரி ப்ரூக் ஒரு பௌண்டரி, 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். 4-ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த டாம் பான்டன் 24 பந்துகளில் 2 பௌண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 52* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
12.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா, இஷான் மலிங்கா, ரத்நாயகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய லியாம் டாஸன் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் திடலில் சனிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.
Tom Banton scored an unbeaten 52 from 24 balls as England routed Sri Lanka by six wickets to clinch their T20 international series with a match to spare.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.