FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

முதல் ஏழு ஆட்டங்களில் தோல்வி: ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக!

ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலை ஏற்படும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

Updated On : 22 ஏப்ரல் 2022, 11:33 am IST
பகிர்:

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஓர் அணி முதல் 7 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலை ஏற்படும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். சிஸ்கேவின் முகேஷ் செளத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்று சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உனாட்கட் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கேவுக்கு இந்த வருடத்தின் 2-வது வெற்றியை அளித்தார் தோனி. ராயுடு 40 ரன்களும் உத்தப்பா 30 ரன்களும் தோனி ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தார்கள்.

Advertisement

Advertisement

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் இதுபோல முதல் 7 ஆட்டங்களில் தோற்றதில்லை. அதிகமுறை ஐபிஎல் கோப்பைகளை (5) வென்ற மும்பை அணி இதுபோல தோற்றிருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று.

புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இதனால் கடந்த வருடம் போல இந்தமுறையும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளது மும்பை. ஆனால் கடைசி 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏதாவது புதிய திருப்பத்தை ரோஹித் படை ஏற்படுத்துமா? 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments