முகப்பு
ஐபிஎல்

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தினை சந்தித்துள்ளார்.

Updated On : 25 ஏப்ரல் 2024, 12:27 pm IST
பகிர்:

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தினை சந்தித்துள்ளார்.

31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே 31 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கெ அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். அதிமாக ரன்களை கொடுப்பதாக இவரை ரசிகர்கள் கிண்டல் செய்வதுண்டு. இருப்பினும் இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிமான டாட் பந்துகளை (ரன்கள் வழங்காமல்) வீசுவதில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “தன்னடகத்தில் புத்திசாலிதனம்” எனக் கூறியுள்ளார். மேலும் ஹேஷ்டேக்கில் தல அஜித்குமார் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

நடிகர் அஜித் குமார் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பினை 90 சதவிகிதம் முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தமிழக வீரர் நடராஜன் பிறந்தநாளில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.