FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ்..! வைரலாகும் விடியோ!

தில்லி வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸியைப் போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.

Updated On : 18 மே 2025, 2:11 pm IST
டு பிளெஸ்ஸியைப் போல பேட்டிங் செய்த சிராஜ் - படங்கள்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்
பகிர்:

தில்லி வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி போலவே பேட்டிங் செய்த சிராஜ் விடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 18-ஆவது சீசனில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெறவில்லை. இருப்பினும் ஆர்சிபி, குஜராத் அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணியும் தில்லி கேபிடல்ஸ் அணியும் இன்றிரவு (மே.18) மோதவிருக்கிறது.

Advertisement

Advertisement

இதற்கான பயிற்சியில் தில்லி கேபிடல்ஸ் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி ஈடுபட்டு வரும்போது குஜராத் வீரர் சிராஜ் அவரைப் போலவே பின்புறம் நின்று பேட்டிங் செய்வார்.

இந்த விடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

குஜராத் தில்லியை வென்றால் குஜராத், ஆர்சிபி தகுதிபெறும். தில்லி வென்றாலும் உடன் பஞ்சாப் வென்றாலும் எந்த அணியுமே பிளே ஆப்ஸுக்கு இன்று தகுதிபெற முடியாது என்பதால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

தில்லி அணி இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் பிளே ஆப்ஸுக்கான தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் அந்த அணிக்கு குஜராத்தை விடவும் முக்கியமான போட்டியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments