FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹாக்கி: இந்தோனேஷியா மீது இந்தியா கோல் மழை

ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி துவக்க ஆட்டத்தில் இந்திய அணி 17-0 என இந்தோனேஷியா மீது கோல் மழை பொழிந்தது.

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 2:47 pm IST
பகிர்:


ஆசியப் போட்டி ஆடவர் ஹாக்கி துவக்க ஆட்டத்தில் இந்திய அணி 17-0 என இந்தோனேஷியா மீது கோல் மழை பொழிந்தது.
நடப்பு சாம்பியன் இந்தியா மீண்டும் தங்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் ஏ பிரிவில் இந்தியாவும்-இந்தோனேஷியாவும் திங்கள்கிழமை மோதின. உலகின் 5-ஆம் நிலை அணியான இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
6 கோல்கள் பெனால்டி கார்னர் முறையில் போடப்பட்டன. ஒரு கோல் பெனால்டி ஸ்ட்ரோக் முறையிலும், மீதி கோல் பீல்ட் கோல்களாக போடப்பட்டன. தில்பிரீத், சிம்ரஞ்சித், மந்தீப், ஆகியோர் தலா 3 கோல்களையும், ரூபிந்தர், அக்ஷதீப் தலா 2 கோல்களையும், சுனில், விவேக், அமித், தலா ஒரு கோலையும் அடித்தனர்.
இந்திய மகளிர் அணி செவ்வாய்க்கிழமை கஜகஸ்தான் அணியுடன் மோதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments