ஐபிஎல் சூதாட்டம்: 7 பேர் கைது
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இந்தூரின் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது, அங்கு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.4.3 லட்சம் ரொக்கம், 50 செல்லிடப் பேசிகள், ஒரே நேரத்தில் 16 செல்லிடப்பேசிகளை இயக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட தொலைத் தொடர்புக் கருவி, 2 மடிக் கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள உஜ்ஜைனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுடன் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.