டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தில் கேன் வில்லியம்சன், கம்மின்ஸ்
ஆல்ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஜடேஜா 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 4-ம் இடத்தில் உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் கேன் வில்லியம்சனும் பந்துவீச்சாளர்கள் பிரிவில் பேட் கம்மின்ஸும் முதல் இடத்தில் உள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். முதல் 10 இடங்களில் இந்தியாவின் விராட் கோலி 5-ம் இடத்திலும் ரிஷப் பந்த் 6-ம் இடத்திலும் ரோஹித் சர்மா 7-ம் இடத்திலும் உள்ளார்கள்.
பந்துவீச்சாளர்கள் பிரிவில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 2-ம் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஜடேஜா 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 4-ம் இடத்தில் உள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.