FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டு: ஆஸி. கேப்டன் டிம் பெயின் விளக்கம்

இந்திய வீரர்களைப் பற்றி குறை மட்டும் கூறவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தினார்கள்

Updated On : 14 மே 2021, 5:40 pm IST
பகிர்:

இந்திய அணியினர் கவனத்தைத் திசை திருப்பியதால் டெஸ்ட் தொடரில் தோற்றோம் எனக் கூறியதற்கு ஆஸி. கேப்டன் டிம் பெயின் விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. 4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. 

Advertisement

Advertisement

டெஸ்ட் தொடர் தோல்வி பற்றி ஒரு விழாவில் ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதில் உள்ள சவாலே அவர்கள் உங்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி தேவையில்லாத விஷயங்களுக்குக் கவனத்தைச் சிதற விடுவார்கள். டெஸ்ட் தொடரில் அந்த வலையில் நாங்கள் விழுந்துவிட்டோம். சிறந்த உதாரணம், அவர்கள் பிரிஸ்பேனுக்குச் செல்லமாட்டோம் என்றார்கள். இதனால் நாங்கள் எங்கு செல்லப்போகிறோம் என்பதை அறியாமல் இருந்தோம். இதுபோன்ற கவனச்சிதறலை நன்கு உருவாக்குவார்கள். அதனால் எங்கள் கவனம் பந்தை விட்டு விலகிவிட்டது என்றார்.

பிரிஸ்பேனில் கரோனா விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் அங்கு விளையாட இந்திய அணி முதலில் தயக்கம் காட்டியது. எனினும் அங்குச் சென்று விளையாடி, வரலாற்று வெற்றியை அடைந்தது. 1988-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் பிறகு பிரிஸ்பேனில் ஆஸி. அணியைத் தோற்கடித்த பெருமையைப் பெற்றது. 

இந்திய அணி மீதான டிம் பெயினின் விமர்சனம் சமூகவலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்திய ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் டிம் பெயினை விமர்சித்துப் பதிவுகள் எழுதினார்கள். இதையடுத்து ஆடம் கில்கிறிஸ்ட் - டிம் காசேஜ் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறியதாவது:

இந்திய வீரர்களைப் பற்றி குறை மட்டும் கூறவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தினார்கள், அதனால் அந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்றும் நான் கூறியுள்ளேன். இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் என்னை அதிகமாக விமர்சித்துள்ளார்கள். நான் சாக்குப்போக்கு கூறுவதாகக் கருதுகிறார்கள். எல்லாமே வேடிக்கையாக உள்ளன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments