முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இணைந்தார் தமிழக வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெரியசாமி தேர்வாகியுள்ளார்.

Updated On : 17 செப்டம்பர் 2021, 5:15 pm IST
பகிர்:

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த பெரியசாமி தேர்வாகியுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி கவனம் ஈர்த்த பெரியசாமி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வாகி துபைக்குச் சென்றுள்ளார். ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழக வீரரான விஜய் சங்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் பெரியசாமி.

Advertisement

Advertisement

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெரியசாமி, தமிழக அணிக்காக 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments