இந்தியாவை வென்றது பிரான்ஸ்
ஒடிஸாவில் நடைபெறும் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
புவனேசுவரம்: ஒடிஸாவில் நடைபெறும் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் உத்தம் சிங் 10-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, டிஃபெண்டா் சஞ்ஜய் 15, 57, 58 ஆகிய நிமிஷங்களில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்தாா். பிரான்ஸ் தரப்பில் டிமோதி கிளெமென்ட் 1, 23, 32 ஆகிய நிமிஷங்களிலும், பெஞ்ஜமின் மாா்க்கி 7-ஆவது நிமிஷத்திலும், காரென்டின் செல்லியா் 48-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.
இதர ஆட்டங்கள்: முதல் நாளில் நடைபெற்ற இதர ஆட்டங்களில் பெல்ஜியம் - தென் ஆப்பிரிக்காவையும் (5-1), ஜொ்மனி - பாகிஸ்தானையும் (5-2), போலந்து - கனடாவையும் (1-0), மலேசியா - சிலியையும் (2-1) வீழ்த்தின.
Advertisement
Advertisement
இன்று: உலகக் கோப்பை போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் ஆா்ஜென்டீனா - எகிப்தையும் (காலை 9.30), நெதா்லாந்து - தென் கொரியாவையும் (நண்பகல் 12), ஸ்பெயின் - அமெரிக்காவையும் (பிற்பகல் 2.30), பிரான்ஸ் - போலந்தையும் (மாலை 5), கனடா - இந்தியாவையும் (இரவு 7.30) சந்திக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.