காமன்வெல்த் போட்டிகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கனடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
செய்திகள்காமன்வெல்த் போட்டிகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கனடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கனடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டது. ஸ்பெயினில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9-ம் இடத்தைப் பிடித்தது.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கனடாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்தது. கானா, வேல்ஸ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. தற்போது கனடாவையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
2018 காமன்வெல்த் கேம்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 4-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இதற்கு முன்பு இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2002-ல் மான்செஸ்டரில் நடைபெற்றபோது தங்கம் வென்றது. இதனால் இங்கிலாந்தில் இம்முறை நடைபெறும் போட்டியிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வெல்லவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Article
செஸ் ஒலிம்பியாட்: முக்கியமான ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு
இந்திய டி20 அணியில் அஸ்வினா?: கேள்வி எழுப்பும் ஸ்ரீகாந்த்
தமிழகத்தின் 16 வயது குகேஷ்: இந்தியாவின் நெ.3 செஸ் வீரர்!
சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: அறிவிப்பு
டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்
ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!
காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)