ராகுல் - கில் 
செய்திகள்

டெஸ்ட்: 400 ரன்கள் முன்னிலையை நெருங்கும் இந்திய அணி!

இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்கள். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியிருந்தது.

3-வது நாளான இன்று வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எபடாட் 17 ரன்களில் குல்தீப் பந்திலும் மெஹிதி 25 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்திலும் ஆட்டமிழந்தார்கள். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி.

3-வது நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. ராகுல் 20, ஷுப்மன் கில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து நன்கு பேட்டிங் செய்து அதிக ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் கே.எல். ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 84 பந்துகளில் அரை சதமெடுத்தார். அதன்பிறகு சற்று விரைவாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். அவருக்கு புஜாராவும் நல்ல இணையாக விளங்கினார். 

3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 80, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 394 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT