நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ருதுராஜ் சதம்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3-வது ஆட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெயிக்வாட், இன்று அபாரமாக விளையாடி சதமடித்தார். 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். உபேந்திர யாதவ் 76 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசி. ஏ அணியின் மேத்யூ ஃபிஷர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.