FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யுங்கள்: ரஷித் கான் கோரிக்கை

டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2022, 12:24 pm IST
பகிர்:

டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஐபிஎல் உள்பட பல டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு பேட்டியில் ரஷித் கான் கூறியதாவது:

டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை விடவும் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் இடம்பெற்றால் கூடுதலாக மகிழ்வேன். உலகமெங்கிலும் நடைபெறும் போட்டிகளில் எங்கள் நாட்டுப் பந்துவீச்சாளர்கள் பலர் விளையாடி வருகிறார்கள். அதேபோல எங்களுடைய பேட்டர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும். அது அவர்களுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்தும். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் அதனால் நல்லது நடக்கும். சிலர் பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியுள்ளார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது அதை நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதேபோல ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய திறமையை நிச்சயம் நிரூபிப்பார்கள். எங்களுடைய பேட்டர்கள் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்றார். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments