FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழ்ப் பெண்ணை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் (படங்கள்)

பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்துள்ளார்.

Updated On : 21 மார்ச் 2022, 12:15 pm IST
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியப் பெண்ணை மணந்த 2-வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். 

Advertisement

Advertisement

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. 

படங்கள்: www.instagram.com/vini.raman/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments