உலக சாம்பியன் நிகாத் ஜரீன்
இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வியாழக்கிழமை வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர்
புது தில்லி: இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வியாழக்கிழமை வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித்போங் ஜுடாமûஸ தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தனது தொடக்க சுற்று முதல் இறுதிச்சுற்று வரை அனைத்திலுமே எதிராளிக்கு ஒரு புள்ளியைக் கூட விட்டுக் கொடுக்காமல் 5-0 என்ற கணக்கிலேயே வெற்றிகளை பதிவு செய்துள்ளார் நிகாத்.
நிகாத் ஜரீனுக்கு முன், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜெனி ஆர்.எல். (2006), லேகா கே.சி. (2006) ஆகியோர் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளாவர்.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு போட்டியில் நிகாத் ஜரின் தவிர்த்து, மனீஷா மெளன் (57 கிலோ), பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.