முகப்பு
செய்திகள்

அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது பெரிய இழப்பு: வங்கதேச கேப்டன்

அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஆகஸ்ட் 2023, 4:31 pm IST
பகிர்:

அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் இலங்கையை எதிர்கொள்கிறது.  வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், தமிம் இக்பால் போன்ற மூத்த வீரர்கள் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. லிட்டன் தாஸ் தீவிர காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தமிம் இக்பால் அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது உண்மையில் பெரிய இழப்பு. லிட்டன் தாஸ் கடந்த 4-5 ஆண்டுகளாக  வங்கதேச அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். அவர் அணியில் இல்லை. மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது மற்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அவர்கள் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். வீரர்கள் பதற்றமின்றி இருப்பது மிகவும் முக்கியம். இலங்கையில் இலங்கை அணியை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கப் போகிறது. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments