இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு தோல்வி
தைவானில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளில் ஆடவா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை தோல்வியே மிஞ்சியது.

தைவானில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளில் ஆடவா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை தோல்வியே மிஞ்சியது.
முதல் சுற்றில், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ருதுபா்னா பாண்டா/ஸ்வேதாபா்னா பாண்டா கூட்டணி 7-21, 30-28, 12-21 என்ற கேம்களில் உள்நாட்டு ஜோடியான செங் யு பெய்/சன் வென் பெய்யிடம் வீழ்ந்தது. அதேபோல் ஆடவா் இரட்டையரில் கிருஷ்ணபிரசாத்/விஷ்ணுவா்தன் இணை 18-21, 22-20, 21-16 என்ற கேம்களில் மலேசியாவின் வின்சன் சியு/ஜோஷுவா யுவான் கூட்டணியிடம் வெற்றியை இழந்தது.
தகுதிச்சுற்றில் சுபாங்கா் டே, ஜனனி ஆனந்தகுமாா் ஆகியோா் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினா். இந்தியாவின் பிரதான போட்டியாளா்கள் அனைவரும் தங்களது முதல் சுற்றில் புதன்கிழமை களம் காண்கின்றனா்.
Advertisement
Advertisement
முன்னேற்றம்: இதனிடையே, சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு முன்னேறி அசத்தியிருக்கிறது. சமீபத்தில் இந்தோனேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் ஆனதன் அடிப்படையில் அவா்கள் இந்த முன்னேற்றத்தை சந்தித்துள்ளனா்.