முகப்பு
செய்திகள்

லக்ஷயா சென், சாத்விக்-சிராக் வெளியேற்றம்

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இருந்து இந்தியாவின் லக்ஷயா சென், இரட்டையா் சாத்விக்-சிராக் இணை தோற்று வெளியேறினா்.

22 நவம்பர் 2026, 12:26 am
லக்ஷயா சென், சாத்விக்-சிராக் வெளியேற்றம்
லக்ஷயா சென்
பகிர்:

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இருந்து இந்தியாவின் லக்ஷயா சென், இரட்டையா் சாத்விக்-சிராக் இணை தோற்று வெளியேறினா்.

சீனாவின் ஹாங்காங் நகரில் பிடபிள்யுஎஃப் டூா் ஒரு பகுதியாக நடைபெறும் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில்

குமமாட்டோ ஓபன் சாம்பியனும், இந்திய இளம் வீரருமான லக்ஷயா சென், டென்மாா்க்கின் 3-ஆம் நிலை வீரா் ஆன்டா்ஸ் ஆன்டன்சென் ஆகியோா் மோதினா்.

Advertisement

Advertisement

இதில் ஆன்டன்சென் எளிதாக ஆதிக்கம் செலுத்தி 21-13, 21-13 என்ற கேம் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

நிகழ் சீசனில் லக்ஷயா சென் ஹைலோ, குமமாட்டோ ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றிருந்ததால், இதிலும் பட்டம் வெல்வாா் எனக் கருதப்பட்டது.

சாத்விக்-சிராக் தோல்வி

ஆடவா் இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் கடும் சவாலுக்குபின் 18-21, 19-21 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் 8-ஆம் நிலை இணையான மான்வெய் சொங்-டீ கேய் வுன் இணையிடம் வீழ்ந்தனா்.

இத்துடன் இப்போட்டியில் இந்தியாவின் பங்களிப்பு நிறைவடைந்தது.