முகப்பு
செய்திகள்

டிரா: டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்தியா!

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

Updated On : 13 மார்ச் 2023, 3:36 pm IST
பகிர்:

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128 அக்‌ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை இன்றும் தொடர்ந்தது. 

Advertisement

Advertisement

5-வது நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 36 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. குனேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் டிஆர்எஸ் வழியாக முறையீடு செய்யாமல் கிளம்பினார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட் இல்லை எனத் தெரிந்தது. ஹெட் 45, லபுஷேன் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அதன்பிறகும் நன்கு விளையாடிய டிராவிஸ் ஹெட், 90 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 78.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 63, ஸ்மித் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதையடுத்து 4-வது டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்து இரு அணிகளும் கைகுலுக்கிக் கொண்டன.

இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments