FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சேப்பாக்கத்தில் தோனியின் தாயாருக்கு நன்றி சொன்ன ரசிகர்கள்!

அன்னையர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் தோனியின் தாயாருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 14 மே 2023, 9:55 pm IST
பகிர்:

அன்னையர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் எம்.எஸ். தோனியின் தாயாருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61வது ஐபிஎல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 முடிவில் ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது. 

இந்நிலையில், ஆட்டத்தின் இடையில் அரங்கிற்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் சிலர், தோனி அம்மாவுக்கு நன்றி தெரிவித்து பதாகைகளை ஏந்திப் பிடித்தனர். 

Advertisement

Advertisement

நீங்கள் எங்களுக்கு தோனியை பரிசாக அளித்துள்ளீர்கள். நன்றி தேவகி அவர்களே. அன்னையர் தின வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பிய சம்பவம் அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான புகைப்படங்களும் விடியோவும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments