FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகார்: மெமு ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து

பிகாரில் மெமு ரயிலின் 2 பெட்டிகளில் திடீர் தீவிபத்தால் பரபரப்பு நிலவியது....

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 11:55 am IST
தீ விபத்து ஏற்பட்ட ரயில்.
பகிர்:

பிகாரில் மெமு ரயிலின் 2 பெட்டிகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டால் பரபரப்பு நிலவியது.

பிகார் மாநிலம், சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரயில் நிலையத்தில் சமஸ்திபூர்-சஹர்சா மெமு ரயிலின் இரண்டு பெட்டிகளில் திங்கள்கிழமை அதிகாலை தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி சரஸ்வதி சந்திரா கூறுகையில், "அதிகாலை சுமார் 3 மணியளவில் சமஸ்திபூர்-சஹர்சா மெமு ரயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ​​ரயிலின் மோட்டார் பெட்டியில் தீப்பிடித்திருப்பதாக நிலைய அதிகாரி தகவல் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

"தீ விரைவாக மற்றொரு பெட்டிக்கும் பரவியது. தீயணைப்பான்களைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். மேல்நிலை மின்சாரக் கட்டமைப்பு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இறுதியில், காலை 5.50 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

summary

Fire engulfed two coaches of the Samastipur-Saharsa MEMU train at Simri Bakhtiyarpur station in Bihar's Saharsa district on Monday morning, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments