FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்மித் விளையாடவில்லை: ஆஸி. அணியில் 2 மாற்றங்கள்! 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. 

Updated On : 7 நவம்பர் 2023, 3:11 pm IST
பகிர்:

திடீரென சிலருக்கு அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் சுற்றுவது போல இருக்கும். இதற்கு வெர்டிகோ என்று பெயர். ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்தப் பிரச்னை உள்ளதாக நேற்று செய்தி வெளியாகியது.

இது குறித்து ஓய்வறையில் இருந்து ஸ்மித், “கடைசி நாளில் இருந்து எனக்கு சில நேரங்களில் வெர்டிகோ பிரச்னை ஏற்பட்டது. இது சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் சரியாகுமென நம்புகிறேன். ஆனால் இங்கிருப்பது சரியான இடமாக தோன்றவில்லை. நான் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் சிறப்பாக இருப்பதாக உணரவில்லை. இங்கிருப்பது விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயமாக பயிற்சியில் எடுபடுவேன்” எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் ஸ்மித் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அணியில் இரு மாற்றங்கள்: ஸ்மித், கேம்ரூன் கிரீன்க்கு பதிலாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் . 

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 14 ஒவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 68/1 ரன்கள் எடுத்துள்ளது. குர்பாஜ் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க இப்ரஹிம் 40*, ரஹமத் ஷா 6* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments