செய்திகள்

77வது சதமடித்த விராட் கோலி! 

DIN

34 வயதாகும் விராட் கோலி 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,000க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். இதில் 47 சதங்கள், 66 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 112முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்தும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்டில் 29 சதங்களும் டி20யில் 1 சதத்தினையும் ஒருநாள் போட்டிகளில் 47சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தும் புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.  

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சதமடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 47வது சதத்தினை நிறைவு செய்துள்ளார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இது 77வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து  4வது முறையாக சதம் அடித்துள்ளதும் கூடுதல் தகவல்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

50 ஒவர் முடிவில் 356/2 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. கோலி-122, ராகுல்-111. 

அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. சச்சின் டெண்டுல்கர் - 100 
  2. விராட் கோலி- 77 
  3. ரிக்கி பாண்டிங் - 71 
  4. குமார் சங்ககாரா- 63 
  5. ஜாக் காலிஸ்- 62

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT