FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு மிகக் குறைவு: கேன் வில்லியம்சன்

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2023, 4:40 pm IST
பகிர்:

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபில் போட்டியின்போது குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஐபில் தொடரிலிருந்து விலகினார். அதன் பின் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என  கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பானது. இந்த உலகக் கோப்பையில் நான் கலந்து கொள்வேனா என்று இன்னும் தெரியவில்லை. கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. காயத்திலிருந்து குணமடைந்து உலகக் கோப்பையில் கலந்து கொள்வது கடினமான இலக்கு. இருப்பினும், உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது என்றார்.

நியூசிலாந்து அணிக்காக 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 6,555 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments