சிறந்த ஐவர்களில் இரண்டு பேட்டர்கள் ஆகச்சிறந்தவர்கள்: கிரேக் சாப்பல்
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் ஃபேபுலஸ் ஃபைவ்வில் இரண்டு வீரர்களை சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஃபேபுலஸ் ஃபோர் (மிகச் சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. இதில் இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது இந்த அடைமொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஐந்தாவதாக இணைந்துள்ளார். அதனால் ஃபேபுலஸ் ஃபைவ் என அழைக்கப்படுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை வரும் அக்.5ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் நேர்காணல் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம்?: வைரலாகும் புதிய தோற்றம்!
Advertisement
Advertisement
அதில்,“இந்த ஐவர்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை எடுத்துள்ளார்கள். இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை வரும்நிலையில் இந்த ஐவர்களுக்குமே ரன்கள் குவிக்க அதிகம் வாய்ப்புள்ளது. ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், டி20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக இருப்பது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே. இந்த இரண்டு பேட்டர்கள் தங்களது முத்திரையை இந்த உலகக் கோப்பையில் பதிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிக்க: இவரது படங்களில் நடிக்காவிட்டாலும் மரியாதையுடன் பேசுவார் : கங்கனா ரணாவத் குறிப்பிடுவது யாரை?
விராட் கோலி டெஸ்டில் 8676 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 12898 ரன்களும் எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 9320 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 4939 ரன்களும் எடுத்துள்ளார்.
ஸ்மித்தின் ஒருநாள் சராசரி 44.49 மற்றும் டெஸ்டில் 58.61 என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் ஒருநாள் சராசரி 57.32 மற்றும் டெஸ்டின் சராசரி 49.29 ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.