விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது.
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்களும் ஜாக் க்ராவ்லி 48 ரன்களும் சால்ட் 45 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: இந்த வெற்றிக்கு காரணம் தோனி: மே.இ.தீவுகள் அணி வீரர் புகழாரம்!
Advertisement
Advertisement
அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
தொடக்க வீரர் அலிக் அதான்ஜா 66 ரன்களும் ரொமாரியோ ஷெபார்ட் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஷாய் ஹோப். மேலும் அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்தப் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.