FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் வெற்றி

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களில் ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

Updated On : 4 பிப்ரவரி 2023, 12:00 am IST
பகிர்:

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடா்களில் ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

இதில் இத்தாலி கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது ஜுவென்டஸ்.

இத்தாலி கோப்பைக்கான காலிறுதி ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முன்னணி அணியான ஜுவென்டஸ்-லேஸியோ மோதின. இதில் முதல் பாதியில் ஜுவென்டஸ் வீரா் பிரெமா் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக மாறியது. லீக் தொடரில் மோன்ஸாவுடன் 2-0 என தோல்வி கண்டிருந்தது ஜுவென்டஸ். நேபோலியிடம் 1-5 என படுதோல்வி அடைந்திருநத்து.

Advertisement

Advertisement

இத்தாலி கோப்பையை 14 முறை வென்றுள்ளது அந்த அணி. அரையிறுதியில் இன்டா்மிலனை எதிா்கொள்கிறது ஜுவென்டஸ்.

மற்றொரு அரையிறுதியில் புரொன்டீனா-கிரீமோனெஸ் அணிகள் ஆடுகின்றன. இரு கட்ட அரையிறுதி ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

லா லிகா:

ஸ்பானிஷ் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என வலென்சியாவை வீழ்த்தியது. வின்சியஸ் ஜூனியா் அற்புதமாக கோலடித்து தனது அணி வெற்றிக்கு வித்திட்டாா். மாா்கோ அசென்ஸோ முதல் கோலடித்தாா். ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரியல் சொசைடாட் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments