2-வது டெஸ்டிலிருந்து வார்னர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!
தலைக்கவசத்தில் பந்து பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் வார்னர்.
தலைக்கவசத்தில் பந்து பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் வார்னர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் நடைபெற்று வருகிறது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார் புஜாரா.
டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி ஒரு வேகப்பந்து வீச்சாளர், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடமில்லை.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. மூத்த வீரர் டேவிட் வார்னர், 15 ரன்களுக்கு ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவருடைய இன்னிங்ஸில் சிராஜ் வீசிய பந்து, வார்னரின் தலைக்கவசத்தில் பட்டது. பிறகு சிராஜின் மற்றொரு பந்து, முழங்கையைத் தாக்கியது. இதனால் மைதானத்திலேயே வார்னருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஆட்டமிழந்த பிறகு நடத்தபட்ட மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி அடையாததால் 2-வது டெஸ்டிலிருந்து வார்னர் விலகியுள்ளார். வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் மாற்று வீரராக ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் ரென்ஷா பேட்டிங் செய்யவுள்ளார். எனினும் பந்துவீச ரென்ஷாவுக்கு அனுமதி இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.