டெஸ்ட் தொடர்: பிரபல ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். குதிகால் தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டதால் முதல் இரு டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை. எனினும் காயம் குணமாகாததால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி ஊருக்குத் திரும்பவுள்ளார். இதனை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதி செய்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.