முகப்பு
செய்திகள்

ஐசிசி போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையும் இந்திய மகளிர் அணி!

இன்னொரு ஐசிசி போட்டி, நாக் அவுட் ஆட்டத்தில் இன்னொரு தோல்வி. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இது தொடர்கதையாக உள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2023 at 1:23 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:05 PM

இன்னொரு ஐசிசி போட்டி, நாக் அவுட் ஆட்டத்தில் இன்னொரு தோல்வி. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இது தொடர்கதையாக உள்ளது.

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களையே எட்டியது. 

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, தற்போது அரையிறுதியிலேயே அதே அணியிடம் வீழ்ந்து வெளியேறியிருக்கிறது. இதனால், உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.

Advertisement

2017 முதல் ஐசிசி மற்றும் முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்குக் கிடைத்த தோல்விகள்

2017 ஒருநாள் உலகக் கோப்பை - 2-ம் இடம் 
2018 டி20 உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி  
2020 டி20 உலகக் கோப்பை - 2-ம் இடம் 
2022 ஒருநாள் உலகக் கோப்பை - லீக் சுற்றில் தோல்வி 
2022 காமன்வெல்த் போட்டி - 2-ம் இடம் 
2023 டி20 உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.