முகப்பு
செய்திகள்

தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி!

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 

Updated On : 6 அக்டோபர் 2023, 6:26 pm IST
பகிர்:

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 

2018ஆம் அண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஜப்பான் அணியை வீழ்த்தியதன்மூலம், ஆசிய விளையாட்டில் 4வது முறையாக இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது. 

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

Advertisement

Advertisement

13 ஆவது நாளான இன்று, ஆடவருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஜப்பான் அணியை எதிர்கொண்டது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹாக்கி போட்டியில் 4வது முறையாக இந்தியா தங்கம் வென்றுள்ளது. பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்தியா தகுதியடைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments