123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்!
123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
123 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்சில் வருகிற 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒலிம்பிக் குழுவிடம் அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்!
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கிரிக்கெட்டைத் தவிர்த்து பேஸ்பால் உள்ளிட்ட மேலும் நான்கு புதிய போட்டிகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், எத்தனை அணிகள் பங்கேற்கும் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
கிரிக்கெட் முதலும், கடைசியுமாக கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.