FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் புதன்கிழமை தங்கப் பதக்கத்தை வென்றனர்.

Updated On : 27 செப்டம்பர் 2023, 12:09 pm IST
துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்
பகிர்:

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் புதன்கிழமை தங்கப் பதக்கத்தை வென்றனர்.

மகளிருக்கான 25 மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அடங்கிய மூவர் அணி 1,759 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

அதேபோல், 50 மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற சாம்ரா கவுர், ஆஷி சௌக்சி மற்றும் மனினி கௌஷிக் அணியினர் 1,764 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டனர்.

Advertisement

Advertisement

இதன்மூலம் 4 தங்கப் பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments