வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா.
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. ஏற்கனவே காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவுகளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
மகளிர் அணி, ஆடவர் அணி, காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி 3 தங்கம் வென்றனர்.
இந்நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதி சுரேகா ரீகா்வ் மகளிர் தனிநபா் பிரிவில் எஸ்டோனியாவின் மரிடா பாஸுடன் அரையிறுதியில் 149-147 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
Advertisement
Advertisement
காலிறுதியில் அவ்னித் கௌரை 143-142 என்ற புள்ளிகளில் ஜோதி சுரேகா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரீகா்வ் சுற்றுன் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.