முகப்பு
செய்திகள்

3வது குழந்தைக்கு தந்தையான கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்-சாரா ரஹும் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2024, 3:09 pm IST
புதியதாக பிறந்த பெண் குழந்தையுடன் கேன் வில்லியம்சன் மற்றும் அவரது மனைவி. - படம்: இன்ஸ்டாகிராம் / கேன் வில்லியம்சன்
பகிர்:

நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரபல கிரிக்கெட்டர் கேன் வில்லியம்சன்-சாரா ரஹும் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். அவர் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 7 சதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தனது மகளின் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “இப்போது 3வது குழந்தை... அழகான பெண்ணே, இந்த உலகத்துக்கு உன்னை வரவேற்கிறோம். பாதுகாப்பாக பிறந்ததுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்; உன்னுடனான வருங்கால பயணத்துக்கு ஆர்வமாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

2015 முதல் சாரா ரஹும் உடன் வாழ்ந்து வருகிறார் கேன் வில்லியம்சன். கேன் வில்லியம்சனுக்கு 3வயதில் ஒரு பெண்ணும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments