செய்திகள்

இதுவே எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை; மனம் திறந்த அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக அஸ்வின் தெரிவித்தார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர் தனது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாடவுள்ளது மிகப் பெரிய தருணம். சென்றடையும் இடத்தைக் காட்டிலும் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி எனது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனைகளில் ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடர் குறித்து அதிகம் பேசப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் என்னுள் பல மாற்றங்களை கொண்டு வந்தது என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

2 சக்கர வாகன விற்பனை: 4-ஆவது இடத்தில் தமிழ்நாடு

SCROLL FOR NEXT