FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரொனால்டோவின் சாதனையை சமன்செய்த மெஸ்ஸி..! ஓய்வு குறித்து கூறியதென்ன?

2026 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பொலிவியாவுடன் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 16 அக்டோபர் 2024, 3:38 pm IST
லியோனல் மெஸ்ஸி... - Natacha Pisarenko
பகிர்:

2026 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பொலிவியாவுடன் 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (19’, 84’, 86’) ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது 10ஆவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கோல்கள் மட்டுமில்லாமல் 2 கோல்கள் அடிக்கவும் மெஸ்ஸி உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதனால் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.

ரொனால்டோவின் சாதனையை சமன்செய்த மெஸ்ஸி

இதன் மூலம் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 10ஆவது ஹாட்ரிக்கை சமன்செய்துள்ளார். இதனால் மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

37 வயதாகும் மெஸ்ஸி ஆர்ஜென்டினா அணிக்கு 189 போட்டிகளில் 112 கோல்கள் அடித்துள்ளார். சீனியர் அணியில் 2006இல் தனது முதல் கோலை குரோஷியா அணிக்கு எதிராக அடித்தார்.

ரொனால்டோ சமீபத்தில் 900 கோல்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மெஸ்ஸி மொத்தமாக 846 கோல்கள் அடித்துள்ளார்.

ஓய்வு குறித்து மெஸ்ஸி கூறியதாவது:

நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போது மகிழ்ச்சியான ஒன்று. என்னுடைய பெயரை மக்கள் உச்சரிக்கும்போது நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். ஆர்ஜென்டினாவில் விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமானது. மக்களின் அன்பைப் பகிர்ந்துகொள்வதில் அணியினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

எனது ஓய்வு குறித்து நான் எதுவும் திட்டமிடவில்லை. நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன் அவ்வளவே. மக்களின் அன்பை உணர்வதால் யாரையும்விட இங்கு விளையாடுவது எனக்குதான் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுதான் கடைசியாக இருக்குமென நினைக்கிறேன். இந்தாண்டின் முடிவுக்குள் நான் அதிகமான கோல்களை அடிக்க முடிவெடுத்துள்ளேன். எனது ஒவ்வொரு நாளையும் படிப்படியாக ரசித்து முடிவெடுத்துள்ளேன்.

நான் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்னை உற்சாகப்படுத்துகிறது. என்னுடைய வயது என்னாவாக இருந்தாலும் நான் இந்த அணியுடன் இருக்கும்போது குழந்தையாகவே இருக்கிறேன். என்னால் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments