முகப்பு
செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதலிடத்தில் நிலைக்கும் இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Updated On : 24 செப்டம்பர் 2024, 3:14 am IST
பகிர்:

துபை: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியா 71.67 புள்ளிகள் சதவீதத்துடன் அந்த இடத்திலிருக்க, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-ஆவது இடத்தில் (62.50%) உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்ற இலங்கை ஓரிடம் முன்னேறி 3-ஆவது இடத்தை (50%) பிடித்திருக்கிறது. அந்த இடத்திலிருந்த நியூஸிலாந்து 4-ஆவது இடத்துக்கு (42.86%) சறுக்கியுள்ளது.

இங்கிலாந்து 5-ஆவது இடத்தில் (42.19%) இருக்க, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை வென்று 4-ஆவது இடத்திலிருந்த வங்கதேசம், தற்போது இந்தியாவுடனான தோல்வியைத் தொடர்ந்து 6-ஆவது இடத்துக்கு (39.29%) இறங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா (38.89%), பாகிஸ்தான் (19.05%), மேற்கிந்தியத் தீவுகள் (18.52%) ஆகியவை முறையே கடைசி 3 இடங்களில் உள்ளன.

Advertisement

Advertisement

டெஸ்ட் சுழற்சி முடிவில் இந்தப் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.