FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குஜராத்தை வென்றது தில்லி

புரோ கபடி லீக் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

7 பிப்ரவரி 2024, 8:55 pm IST
பகிர்:


நொய்டா: புரோ கபடி லீக் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

இது, தில்லிக்கு 9 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியாக இருக்க, குஜராத்துக்கு 10 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியாகும். இரு அணிகளும் முறையே 3 மற்றும் 2-ஆவது இடங்களில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் தில்லி 23 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. குஜராத் அணி 17 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக தில்லி அணிக்காக கேப்டன் அஷு மாலிக் 11 புள்ளிகளும், குஜராத் அணிக்காக ரெய்டா் பா்தீக் தாஹியா 9 புள்ளிகளும் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments