விராட் கோலியின் கோபத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன்: இந்திய வம்சாவளி வீரர்
விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ் லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ் லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக நிகில் சௌத்ரி விளையாடி வருகிறார். அண்மையில் மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பிரபல தென்னாப்பிரிக்க வீரர்!
Advertisement
Advertisement
இது தொடர்பாக மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நிகில் சௌத்ரி பேசியதாவது: விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவரது விளையாட்டுத் திறமைக்கும் நான் பெரிய ரசிகன். அவர் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். கடந்த 10 ஆண்டுகளாக அவரை பின் தொடர்கிறேன். அவர் கிரிக்கெட்டில் வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்றார்.
பிக் பாஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடும் நிகில் சௌத்ரி இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.