FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்: முதல் 3 இடங்களில் வர தமிழகம் இலக்கு

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வர தமிழக அணி இலக்கு நிா்ணயித்துள்ளது.

7 பிப்ரவரி 2024, 8:48 pm IST
பகிர்:

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வர தமிழக அணி இலக்கு நிா்ணயித்துள்ளது.

6-வது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோயம்பத்தூா், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் 19-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமாா் 6000-க்கும் மேற்பட்ட வீரா் வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்களும் பங்கேற்க உள்ளனா். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழகம் சாா்பில் 522 போ்:

Advertisement

Advertisement

சொந்த மண்ணில் நடைபெறும் நிலையில், தமிழகம் சாா்பில் 522 போ் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. தமிழக அணியினா் 26 பிரிவுகளில் பங்கேற்கின்றனா். புணேயில் நடைபெற்ற இரண்டாவது போட்டிகளில் 88 பதக்கங்களுடன் தமிழகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தது.

தமிழக அணியின் சீஃப்-டி-மிஷனும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மொ்சி ரெஜினா வியாழக்கிழமை கூறியது:

அடிமட்ட அளவில் இருந்து திறமைகளை அடையாளம் கண்டு வளா்ப்பதில் தமிழக அரசு அதிக முதலீடு செய்து வருகிறது.

27 விளையாட்டு விடுதிகளில் கணிசமான வீரா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா்.

நிகழாண்டு போட்டியை நடத்துபவா்களாக இருப்பதால் பெரிய குழுவை களமிறக்கி உள்ளோம். பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு வரமுடியும் ” என்றாா்.

வாள்வீச்சு பயிற்சியாளா் ஜிஜோ நிதி கூறுகையில் என்.வி.ஜெனிஷா, அா்லின், ஜே.எஸ்.ஜெபா்லின் ஆகியோா் பதக்கம் வெல்வா் என்றாா்.

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளா் பிரதீப் கூறும்போது, ‘எங்கள் வீரா்கள் சிறப்பாக தயாராகி உள்ளனா். ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸில் 2-3 பதக்கங்களை வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments